இராமநாதபுர மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொம்பூதி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவி அ.சுகந்தி ‘கிராமப்புற பணி வேளாண்மை அனுபவ திட்டத்தின் கீழ் விவசாய விழிப்புணர்வு கூட்டம் நடத்தினார். மேலும் மாணவி அ.சுகந்தி தெரிவிக்கையில் விவசாயிகளிடையே ஒழுங்கு முறை விற்பனைகூடம் பற்றியும் குளிர்பதன சேமிப்பு கிடங்கு பற்றியும் விழிப்புணர்வு இருப்பதில்லை என்றும் வழிவழியாக விவசாயிகள் பாரம்பரிய சேமிப்பு முறையினையே பின்பற்றுகிறார்கள் என்றும் ஒழுங்கமுறை விற்பனை கூடங்களில் உள்ள பல்வேறு நலத்திட்டங்கள் விவசாயிகளுக்கு அறியாத ஒன்றாகவே உள்ளது என்று கூறினார். மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம், பரமக்குடி, கமுதி திருவாடானை, முதுகுளத்தூர் மற்றும் இராஜசிங்கமங்களம் ஒழுக்கமுறை விற்பனை கூடங்கள் உள்ளன. எட்டிவயல் குளிர்பதன சேமிப்பு கிடங்கு பற்றியும் மின்னனு தேசிய வேளாண் சந்தை திட்டம் (e-NAM) மின்னணு பரிவர்த்தனை பற்றியும் விவரிக்கப்பட்டது என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில் கிராமப்புற விவசாயிகள் கலந்து கொண்டனர்.

You must be logged in to post a comment.