வேளாண்மைத்துறையில் பட்டதாரி இளைஞர்களை தொழில் முனைவோர் ஆக்க நிதி உதவி

வேளாண்மைத்துறையில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2024-25 ல் பட்டதாரி இளைஞர்களை தொழில் முனைவோர் ஆக்கும் விதமாக வங்கி கடன் உதவியுடன் கூடிய வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவருக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கிட திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு கீழ்க்கண்ட தகுதிகள் இருக்க வேண்டும் அவை வயது 21 முதல் 40 க்குள் இருக்கவேண்டும் , கல்வித்தகுதி இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் , அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்கக்கூடாது. விண்ணப்பதாரர் கணிணி திறன் பெற்றிருக்கவேண்டும் ,ஒரு குடும்பத்திற்கு ஒரு பட்டதாரி மட்டுமே நிதி உதவி பெற தகுதியுடையவர் ஆவார் , வங்கி மூலம் கடன் பெற்று தொழில் புரிவோர் நிறுவனத்தின் உரிமையானது தனியுரிமையாக இருக்க வேண்டும் ,பயனாளி தனது மூலதனத்தில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் ( PMFME) அல்லது வேளாண் உட்கட்டமைப்பு நிதி (AIF) யின் கீழ் அனுமதிக்கக்கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில் துவங்கவேண்டும். வங்கி கடன் உதவியுடன் கூடிய தொழில்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் , இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படும் பயனாளிகள் மானிய தொகை போக மீதமுள்ள தொகைக்கு வங்கி கடன் பெற்றதற்கான சான்றிதழை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தனர் . மேலும் தேவையாக ஆவணங்கள்10 மற்றும் 12 ம் வகுப்பு சான்றிதழ் பட்டப்படிப்பு சான்றிதழ் ஆதார் அட்டை குடும்ப அட்டை பாஸ்போர்ட் அளவு புகைப்படம் பயனாளியின் வங்கி கணக்கு புத்தகம் வங்கியிடம் இருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம் தொடங்க உள்ள தொழில் பற்றிய விவரங்கள் விண்ணப்பிக்கும் முறை இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடைய விரும்பும் பட்டதாரி இளைஞர்கள் வேளாண்மைத்துறையின் Agrisnet https://www.tnagrisnet.tn.gov.in/ இணையதளத்தில் படிவம் – 1 ல் விண்ணப்பித்து அதன் நகலினை அந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநரிடம் அளிக்கவேண்டும். கூடுதல் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுக கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அனுமதிக்குழு பயனாளிகளை தேர்வு செய்து மானிய தொகையினை அளிக்க அனுமதி அளிக்கும். இராமநாதபுரம் மாவட்ட பட்டதாரி இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தொழில்முனைவோர் ஆகவேண்டும் என , இராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர். கண்ணையா தெரிவித்துள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!