என் மனம் கொண்டான் மற்றும் கோரவள்ளி கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை முகாம்.!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோரவள்ளி மற்றும் என் மனம் கொண்டான் கிராமத்தில் உழவரைத் தேடி வேளாண்மை என்ற திட்டத்தினை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார் . இம்முகாம்

 வேளாண்மை உதவி இயக்குனர் , தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. உச்சிப்புளி வட்டார வேளாண்மை அலுவலர் மோனிஷா வரவேற்புரை வழங்கினார். உழவரைத் தேடி வேளாண்மை என்ற பெயருக்கு ஏற்ப அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து அந்தந்த கிராமங்களில் மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் வாரங்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

 மீன்வள அலுவலர் சாகுல் ஹமீது, வேளாண்மை உதவி இயக்குனர் சிவகாமி ,உச்சிப்புளி வட்டார உதவி வேளாண் அலுவலர்கள், துணை வேளாண்மை அலுவலர் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். கோரவள்ளி கிராமத்தில் வாலாந்தரவை கால்நடை மருத்துவர் முகமது நிஜாமுதீன் கால்நடைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசி முறைகள் மற்றும் நோய் மேலாண்மை முறைகள் குறித்தும் அரசு வழங்கும் சிறப்பு நலத்திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையம் இணை பேராசிரியர் முனைவர் ராம்குமார், கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகம் பேராசிரியர் முனைவர் சுப்ரமணியன் வேளாண் அறிவியல் நிலையத்தின் செயல்பாடுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ள பயிற்சிகள் குறித்து விளக்கம் அளித்தனர் .

சாகுல் ஹமீது மீன்வளத்துறை ஆய்வாளர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு பண்ணை குட்டைகளை மீன் வளர்த்தல் அலங்கார மீன் வளர்த்தல் அதற்கு அரசு வழங்கும் மானிய நலத்திட்டங்கள் குறித்து விவசாயிகளுடைய விளக்கு பேசினார் சரிதா உதவி வேளாண் அலுவலர் வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை வேளாண் வணிகத் துறையின் கீழ் செயல்படும் நலத்திட்டங்கள் குறித்து கூறினார்,

இரட்டையூரணி கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு கூட்டுறவு கடன் சங்கம் சார்ந்த செயல்பாடுகள் குறித்து மக்களிடையே தெரிவித்தார், மற்றும் திரு தங்கவேல் துணை தோட்டக்கலை அலுவலர் உ ச்சிப்புளி முகாமில் கலந்துகொண்டு தோட்டக்கலைத் துறையின் கீழ் உள்ள நலத்திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்தார். சிவகாமி வேளாண்மை உதவி இயக்குனர் , உயிர்ம சான்று மற்றும் அங்ககச்சான்று துறை, ராமநாதபுரம் முகாமில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் அம்சங்கள் குறித்து விளக்கி கூறி , விவசாயிகள் இத்தகு அரிய திட்டத்தினையும் வாய்ப்பினையும் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளின் கோரிக்கைகள் விண்ணப்பங்களாக பெற்றுக்கொள்ளப்பட்டது விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என துறை சார்ந்த அலுவலர்களால் உறுதி கூறப்பட்டது. வேளாண்துறை தோட்டக்கலை துறை மற்றும் இதர துறைகளின் இருபெருட்கள் விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தும் காட்சிப்படுத்தப் பட்டிருந்தது. வேளாண் தொழில்நுட்பம் சார்ந்த துண்டு பிரசுரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 80-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்

நிகழ்ச்சியில் உச்சிப்புளி வட்டார உதவி வேளாண் அலுவலர்கள், துணை வேளாண்மை அலுவலர், ஆத்மா திட்ட பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!