இராமநாதபுரம் :தனுஷ்கோடி ஆற்றில் சேராங்கோட்டை கிராம மக்கள் மீன்பிடித்தல் தொடர்பாக ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் சமரச கூட்டம் நடந்தது. இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜமனோகரன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, ராமேஸ்வரம் உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெய்லானி முன்னிலை வகித்தனர்.
தனுஷ்கோடி ஆற்றில் ஒரு சாரார் மட்டும் மீன்பிடிக்கும் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். ஆற்றில் தனி நபர் ஒருவருக்கு முறைகேடாக வழங்கிய உள் குத்தகை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேரான்கோட்டை கிராமத்தில் மேலும் ஒரு மீனவர் கூட்டுறவு சங்கம் துவங்க அனுமதி வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. ஆற்றில் சேராங்கோட்டை கிராம மக்கள் மீன்பிடிக்கும் வகையில் உரிமம் வழங்குவது சம்பந்தமாக 2 நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்வு காணப்பட்டது. ராமேஸ்வரம் வட்டாட்சியர் செல்லப்பா, கிராம நிர்வாக அலுவலர் ரொட்ரிகோ, கடல் தொழிலாளர் சிஐடியு சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி, துணை செயலாளர் செந்தில், சேரான்கோட்டை கிராம தலைவர் நம்புராஜன், மீனவ மகளிர் நிர்வாகி ராமசேதுலட்சுமி உள்பட100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.