திருவண்ணாமலை மாவட்டத்தில் போதிமரம் ஆதரவு ஏற்போர் இல்லம் சார்பில் உலக முதியோர் தினவிழா..

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் போதிமரம் ஆதரவு ஏற்போர் முதியோர் இல்லத்தில், உலக முதியோர் தினவிழா மாவட்ட முதன்மை நீதிபதி க.மகிழேந்தி தலைமையில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் முதியோர்களுக்கு உணவு பொருட்களை வழங்கி, கலந்துரையாடி, அனைவரையும் மகிழ்வித்தார். மேலும் அரசு வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள், போதிமரம் நிர்வாகிகள் ரமேஷ்குமார், ராஜராஜேஸ்வரி, பிரேமா, போதிமரம் சேவையாளர்கள், இல்ல வாசிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் போதிமரம் ஆதரவு ஏற்போர் இல்லம் சார்பில் நன்றி கூறப்பட்டு இனிதே விழா நிறைவுற்றது.

தகவல்:- அபுபக்கர்சித்திக்.

செய்தி தொகுப்பு:-அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர் கீழை நியூஸ் ( பூதக்கண்ணாடி மாத இதழ் )

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!