ராமநாதபுரம், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்ட மசோதாவை திரும்பபெறக் கோரி ராமநாதபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் அற்புதராஜ் தலைமையில் சிறுபான்மை மக்களின் சொத்துக்களை பறிக்கும் விதமாக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு சட்டம் திருத்த மசோதாவை கண்டித்தும் இந்த சட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெறக்கோரியும் ராமநாதபுரம் போக்குவரத்து பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ச்சியாக ஒன்றிய அரசு சிறுபான்மை மக்களை வஞ்சிக்கு விதமாக புதிய புதிய சட்ட திருத்த மசோதாக்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளது. அதனைத் தொடர்ந்து இஸ்லாமியர்களின் வக்பு சட்டம் திருத்த மசோதாவை நிறைவேற்றிய உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் இச்சட்டத்தை ஆதரிப்பது இல்லை என்றும் பாஜக அரசை கண்டித்தும்
உடனே ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கண்டனத்தை தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி நிர்வாகிகள் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆதித்தமிழர் கட்சி நிர்வாகிகள் உட்பட 200 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டனத்தை தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.