ஏரல் ஆசாரிமார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட கோயில் சுவரில் சட்டத்திற்கு புறம்பாக அத்துமீறி ஆட்டு தொழுவம் அமைக்க முயற்சி நில அபகரிப்பு செயல்களில் ஈடுபட்டு அங்கு வசித்து வரும் பொதுமக்களை தொடர்ந்து மிரட்டி வரும் ஏரல் சுப்புராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இப்பகுதி மக்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் புகார் மனு அளித்தனர்.ஏரல் பகுதியை சார்ந்த சுப்புராஜ் என்பவர் வருவாய் மற்றும் காவல் அதிகாரிகள் மீது பொய்யான புகார்களை தினமும் அனுப்புவதை வாடிக்கையாக கொள்வதோடு முறைகேடான செயல்களில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினார்.
இதனால் ஏரல் காவல் நிலையத்தில் சுப்புராஜ் மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்க மறுத்து வருகின்றனர் எனவும் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து ஏரல் பகுதியை சார்ந்த கிராம மக்கள் திரளானோர் திரண்டு வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் மனு அளித்தனர்.இதனை தொடர்ந்து சமய நல்லிணக்கத்திற்கு எதிராகவும் நில ஆக்கிரமிப்பு செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் சுப்புராஜ் மீது நடவடிக்கை மேற்கொள்ளவதாக காவல் துறை உயரதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து புகார் மனு அளித்து விட்டு சென்றனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









