உங்கள் தேவைக்கு உதவியை நாடினால் திர்ஹம்.10/- செலவு..

ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அட்னாக் (ADNOC)  எரிவாயு எண்ணை நிறுவனம்,  பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்ப  வாகனத்தின் உரிமையாளர்களே நிரப்பி கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளது.
ஆனால் அப்பணியை செய்ய அங்குள்ளவர்களின் உதவியை நாடினால் 10 திர்ஹம் கூடுதல் சேவை கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த சேவை முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அதே சமயம் வாடிக்கயாளர்கள் நிறுவன ஊழியர்களின் உதவி நாடாமல் தங்கள் வாகனத்துக்கு சுயமாக பெட்ரோல் நிரப்பும் பட்ச்சத்தில் சேவை கட்டணத்தை தவிர்க்கலாம்.
இந்த சேவைக் கட்டணம் அமலுக்கு வருவதற்கு முன்னர் எதிர் வரும் 30 ஜூன் 2018 முதல் வாடிக்கையாளர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளனர். முதல் கட்டமாக இந்த பயிற்சி அபுதாபி மற்றும் வட அமீரக பகுதிகளிலிருந்து தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து பண பரிவர்த்தனையை சுலபமாக்க “ஸ்மார்ட் டேக்” முறையையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர். அதன் மூலம் எரிவாயு நிரப்பியவுடன் ரொக்க பணம் அல்லது டெபிட் கார்டு இல்லாமலேயே பணம் செலுத்த முடியும் அதில் தேவையான வைப்புத் தொகை இருந்தால் போதுமானது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!