ராஜபாளையம் விருதுநகர் கிழக்கு ஒன்றியம் சார்பில் அம்மா 76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்; நலத்திட்ட உதவிகளுக்கான டோக்கன் வழங்கப்படாததால் முதியவர்கள் வேதனை..
விருதுநகர் மாவட்டம் கிழக்கு ஒன்றியம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டமும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என கூட்டத்தினை ஏற்பாடு செய்த அதிமுக நிர்வாகிகள் தெரிவித்திருந்த நிலையில், கூட்டம் முடிந்த பிறகும் கூட டோக்கன் வழங்கப்படாததால் பல முதியவர்கள் மன வேதனையில் அங்கு அமர்ந்திருந்து வேதனையை வெளிப்படுத்தினர்.
ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய சார்பில் அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுவதாக அறிவித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமைக் கழக பேச்சாளர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தலைமைக் கழக பேச்சாளர் கட்சி குறித்து சிறப்புரை ஆற்றும் பொழுது டோக்கன் வழங்கப்படும் என அழைத்து வரப்பட்ட பொதுமக்கள் அயராது தூக்கத்திலும், செல்போன்களை பயன்படுத்தியவாறும் இருந்தனர்.




மாலை ஆறு மணி முதல் அழைத்து வரப்பட்டு பொதுக்கூட்டம் 9 மணி வரை தொடர்ந்து நடைபெற்றதால் வேஷ்டி சேலை வாங்க வந்தவர்கள் கூட பொறுமை பத்தாது அவரவர் வீட்டிற்கு எழுந்து சென்றனர். மேலும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த பொது மக்களுக்கு டோக்கன் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக முதியோர்களை அழைத்து வந்துள்ளார். கூட்டம் முடிந்தவுடன் மேடையில் வைத்து 10 பேருக்கு மட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கி விட்டு மற்றவர்களை காத்திருக்குமாறு பொறுப்பாளர் கூறி உள்ளார். இதனால் கூட்டத்திற்கு வந்து இருந்த முதியவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த நிலையில் பொறுமை இழந்த பொதுமக்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாகவும் காத்திருந்தும் நலத்திட்ட உதவிகள் வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதை கண்டு ஆத்திரம் அடைந்தனர். இந்நிலையில் கட்சியின் பொறுப்பாளர்களை பொதுமக்களும் கட்சி நிர்வாகிகளும் திட்டி தீர்த்தனர். முதியோர்களை காக்க வைப்பது நல்லதல்ல என சில அதிமுக கட்சியினர் திட்டி விட்டு சென்றது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









