பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வெளியிட்டு இருந்தார். மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்தானது.இதனிடையே, அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.அதன்படி, திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதற்கு முன்னதாக, பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனுத் தாக்கல் செய்தார். விருப்ப மனுவை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் விஜய பிரபாகரன் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment.