சிரித்தால் பல் தானே தெரியும். உதயநிதி ஸ்டாலின், மு.க. ஸ்டாலின் மோடியுடன் சிரித்து பேசும் இந்த படங்களில் என்ன தெரிகிறது.? தூத்துக்குடியில் படத்தை தூக்கி காட்டிய எடப்பாடி பழனிச்சாமி..

தூத்துக்குடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அங்கு, அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.கூட்டத்தில் அவர் பேசியதாவது:-திமுக எம்.பிக்கள் மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கவில்லை. மக்களுக்கு பாதிப்பு என்றால் அரசு ஓடோடி வந்து உதவி செய்ய வேண்டும்.அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

மக்கள் வெள்ளத்தில் தூத்துக்குடி பாதிப்படைந்தபோது நான் தான் வந்தேன்.புயல், வெள்ளத்தின்போது திமுக அரசு துரிதமாக செயல்படவில்லை.அதிமுக பற்றி முதலமைச்சர் விமர்சனம் செய்து வருகிறார். பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது அதிமுகவா? திமுகவா? நாங்கள் நினைத்து இருந்தால் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்போம். ஆனால் தேவையில்லை.எங்களுக்கு பதவி பெரிதல்ல, மக்கள் தான் பெரிது. தமிழக மக்களுக்கான திட்டங்கள், நிதிகளை பெறுவோம்.மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தான் அதிமுகவின் லட்சியம். ஆட்சி அதிகாரத்திற்காக திமுக, காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது.தூத்துக்குடி தொகுதியில் அதிமுகவின் வெற்றி உறுதி. 2026-ல் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி மீண்டும் மலரும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தின்போது கல்லை காண்பித்தார். அப்போது, மோடியுடன் நான் இருக்கும் படத்தை காண்பித்து பல் தான் தெரிகிறது என்று கூறினார்.சிரித்தால் பல் தானே தெரியும். உதயநிதி ஸ்டாலின், முக ஸ்டாலின் மோடியுடன் சிரித்து பேசும் இந்த படங்களில் என்ன தெரிகிறது?இவ்வாறு அவர் கூறினார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!