ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்த கவுந்தப்பாடியில் அதிமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில், திருப்பூர் அதிமுக வேட்பாளர் அருணாச்சலத்தை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது:-மக்களோடு மக்களாக இருந்து பிரச்சனைகளை உணர்ந்தவர் அருணாச்சலம். அதிமுகவை வீழ்த்த திமுக பல அவதாரங்களை எடுத்தது.அதிமுகவை அழிக்க திமுக போட்ட திட்டங்கள் தூள் தூளாக்கப்பட்டன. அதிமுகவுக்கு யார் துரோகம் செய்தாலும், அவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும்.அதிமுகவை முடக்க நினைத்த திமுகவின் திட்டங்கள் தவிடு பொடியாக்கப்பட்டன.3 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு திமுக என்ன செய்தது? தமிழகத்தில் மற்ற தொகுதிகளை விட ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொகுதிகளை நன்கு அறிவேன். அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.அதிமுக ஆட்சியில் ஏரி, குளம், குட்டைகள் முழுமையாக தூர்வாரப்பட்டன. அதிமுக ஆட்சியில் அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு ரூ.1652 கோடி ஒதுக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் அத்திக்கடவு அவினாசி திட்டம் 85 சதவீத பணிகள் முடிக்கப்பட்டன.அதிமுக ஆட்சியில் அனைத்து ஏரிகளும் தூர்வாரப்பட்டு நீர் சேமிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு முன்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. எவ்வளவு தொழிற்சாலைகள் இருந்தாலும், உணவு கொடுப்பவர் விவசாயிதான். விவசாயிகளை திமுக அரசு புறக்கணிக்கிறது. விவசாயிகளை காக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான். திமுக எம்பிக்கள் தமிழக மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கவில்லை.அதிமுகவின் அழுத்தத்தால் தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கான நீரை கர்நாடகாவிடம் பேசி பெற வேண்டும்.இந்தியா கூட்டணி கூட்டத்தில், கர்நாடகாவிடம் பேசி தண்ணீரை பெற முயற்சிக்காதது ஏன்?10 சதவீத வாக்குறுதிகளை கூட திமுக நிறைவேற்றவில்லை. அதிமுக அழுத்தம் கொடுத்ததால் தான், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறைவேற்றினார்கள்.அதிமுக ஆட்சியில் நீரை சேமிக்க பல தடுப்பணைகள் கட்டப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









