அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிய எஸ்டிபிஐ கட்சியின் மாநில நிர்வாகிகள்..
கடந்த 7.1.2024 அன்று மதுரையில் நடைபெற்ற SDPI கட்சியின் மாநில மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்ததையொட்டி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (29.1.2024- திங்கட் கிழமை), அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், பொதுச் செயலாளர்களான நிஜாம் மொய்தீன், உமர் பாரூக், செயலாளர் ஏ.கே. கரீம், பொருளாளர் அமீர் அம்சா, செயற்குழு உறுப்பினர் முகமது ரஷீத் ஆகியோர் நேரில் சந்தித்து, தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டனர். இந்நிகழ்வின்போது, கழக தலைமை நிலையச் செயலாளரும். கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்பி வேலுமணி உடன் இருந்தார்..

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









