அதிமுகவில் இணைகின்றார் உசிலம்பட்டி திமுக நகர்மன்றத்தலைவி.அதிமுக விழாவில் திமுகவினர் பங்கேற்றதால் பரபரப்பு.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பின் கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகின்றனார்.கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மட்டுமல்லாது மாற்றுக்கட்சியில் அதிகாரத்தில் இருப்பவர்களையும் தன் பக்கம் இழுத்து வருகின்றார்.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த அமமுக புறநகர் மாவட்ட செயலாளரும் உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மகேந்திரன் தீபாவளி பண்டிகைக்கு பின் அதிமுகவில் இணைந்தார்.தற்போது திமுக முக்கிய பிரமுகர்களும் அதிமுக பக்கம் சாயத்தொடங்கியுள்ளனர்.தற்போது நகர்மன்றத்தலைவராக உள்ள திமுகவைச் சேர்ந்த சகுந்தலா முன்னாள் செயற்குழு உறுப்பினர் சோலை ரவி ஆகியோர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நகரியில் அதிமுக சார்பில் நடைபெற்ற பழனி பாதயாத்திரை குழுவுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் முன்னிலையில் அன்னதானம் வழங்கியிருப்பது பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.இவர்கள் விரைவில் எடப்பாடிபழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைவார்கள் எனக் கூறப்படுகின்றது.இதில் திமுக முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சோலை ராஜா.மூத்த அரசியல்வாதியான இவர் உசிலம்பட்டி மேற்குப்பகுதி கிராமங்களில் செல்வாக்கு மிக்கவர்.மேலும் தற்போது உசிலம்பட்டி நகர் மன்றத்தலைவராக இருப்பவர் சகுந்தலா.திமுகவைச் சேர்ந்தவர்.இவருடைய மகன் விஜய்.திமுக கலை இலக்கியபிரிவு மாவட்டத்தலைவராக உள்ளார்.இவர்களும் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தலைமையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்…

உசிலை மோகன்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!