இராமநாதபுரம் :அண்ணா பல்கலை மாணவிக்கு இழைத்த அநீதியை கண்டித்து அதிமுக சார்பில் ராமநாதபுரத்தில் நாளை (டிச.30) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் ராமநாதபுரம் மக்கள் பங்கேற்க கோரி அதிமுக மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமி வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் கொடுத்து அழைப்பு விடுத்தார். துணைச் செயலாளர்கள் ரத்தினம் (எம்ஜிஆர் மன்றம்), செந்தில் குமார் (மாணவரணி) விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணகுமார், துணைச் செயலாளர் அரவிந்த், ராமநாதபுரம் நகர் செயலாளர் பால்பாண்டியன், மண்டபம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் நாகராஜன் ராஜா உடன் சென்றனர்.

You must be logged in to post a comment.