மதுரை மாவட்டம் மங்கல்ரேவு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அத்திபட்டியில் நடைபெற்ற கூட்டத்தை முடித்துவிட்டு தனது நிர்வாகிகளுடன் வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அமமுகவினர் இடைமறித்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.இத்தாக்குதலில் உடன் வந்த அதிமுக நிர்வாகி தினேஷ்குமார் காயமடைந்து மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று வீடு திருமிபினார். தினேஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் சேடப்பட்டி காவல் நிலையத்தில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள்; மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவரமாக தேடி வந்த நிலையில் இது தொடர்பாக அமமுக சேடபட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி மற்றும் அமமுக உறுப்பினர் பழனிசாமி, அண்ணா தொழிற்சங்க பொதுக்குழு உறுப்பினர் ஒபிஎஸ் அணியை சேர்ந்த குபேந்திரன், அஜய் உள்ளிட்ட 4 பேரை சேடபட்டி தனிப்படை காவல்துறையினர் கைது செய்து உசிலம்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.இந்நிலையில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் பேஸ்புக் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் திமுகவினரின் தூண்டுதலின் பேரில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக நேற்று பதிவிட்டிருந்தார்.இந்நிலையில் அதிமுக கோஷ்டி சண்டைக்குள் தேவையில்லாமல் திமுகவினரை சம்மந்தப்படுத்தி திமுக பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறிய எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் திமுக மாநில் செயற்குழு உறுப்பினர் இளமகிழன் தலைமையில் திமுக வழக்கறிஞர்கள் உசிலம்பட்டி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் செந்தில் குமாரிடம் மனு அளித்தனர்.இச்சம்பவம் உசிலம்பட்டிப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You must be logged in to post a comment.