கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியில் ஆதார் அட்டை முகாம்…

கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியில் 5 (ஐந்து) வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் சிறப்பு முகாம் இன்று (13-04-2017) காலை 10 மணி முதல் நடைபெற்று வருகிறது.  இந்நிகழ்வு இன்று மாலை 05.00 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாம் ஆதார் குழு, தமிழ்நாடு கேபிள் நிறுவனம் மற்றும் வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி கல்விக் குழு ஆகியோரால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியை சமூக திட்ட பாதுகாப்பு தாசில்தார் தமீம் ராசா துவக்கி வைத்தார்.  மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் மௌலா முகைதீன் மற்றும் முகைதீனியா பள்ளி கல்விக் குழு நிர்வாகிகள் முகைதீன் இபுராஹிம்,  சேகு பசீர், பள்ளியின் முதல்வர் சேகு ஷபான் பாதுஷா ஆகியோர் முன்னிலை வகித்ததார்கள்.  இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் மன்சூர் ஏற்பாடு செய்திருந்ததார்.

இம்முகாமில் இதுவரை ஆதார் அட்டை எடுக்காமல் விடுபடட்வர்கள் அனைவரும சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  அதே சமயம் ஆதார் அட்டை எடுக்க வருபவர்கள் மாணவர்களாக இருக்கும் பட்சத்தில் பள்ளி மாணவர் என்பதறகான சான்றிதழுடன் குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டைக்கான படிவத்தையும் கொண்டு வருமாறும் அதே சமயம் பள்ளிமாணவர் அல்லாத மற்றவர்கள் குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டைக்கான படிவத்தையும் கொண்டு வருமாறு அறிவுருத்தப்படுகிறார்கள்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!