கீழக்கரையில் கூடுதல் அரசு தாலுகா மருத்துவமனை கட்டிடம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா ! மும்மத குருமார்கள் கூட்டுப் பிரார்த்தனை !!

 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில்  அரசு தாலுகா மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்ட கூடுதல் கட்டிடம்  மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் மும்மத குருமார்கள் பிரார்த்தனையுடன் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கீழக்கரை நகர செயலாளர் பஷீர் அகமது கீழக்கரை நகர் மன்ற தலைவர் செகானாஸ் ஆபிதா நகர்மன்ற துணைத் தலைவர்  ஹமீது சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனை மருத்துவர்  ஜவாஹிர் உசேன் வரவேற்புரை ஆற்றினார். மேலும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் பேசுவையில் தரம் உயர்த்தப்பட்ட தாலுகா அரசு மருத்துவமனை ஒன்பது கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும்  கீழக்கரை உரக்கடங்கில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் விரைவில் அனைத்து பணிகளும் நிறைவடையும் எனவும் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் செல்வராஜ் நகராட்சி பொறியாளர் அருள் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா திமுக அயலக அணி அமைப்பாளர் இப்திஹார் ஹசன் திமுக நகர் துணை செயலாளர் ஜெய்னுதீன் ஒன்றிய பெருந்தலைவர் கே டி பிரபாகரன் கீழக்கரை நகர மன்ற உறுப்பினர்கள் சப்ராஸ் நவாஸ் சித்திக் மீரான் அலி நஸ்ருதீன் சுகைபு சேக் உசேன் சக்கினா பேகம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர் .

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!