தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் குறிப்பாக மதுரை, திருச்சி மற்றும் பழனி, திண்டுக்கல் செல்லும் பேருந்துகள் இடம் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதற்கு காரணம் பேருந்துகள் முறைப்படி ஏற்பாடு செய்யாமல் முகூர்த்த நாள் மற்றும் திருவிழா காலங்களில் பொது மக்கள் அதிகம் வரும் நாட்களில் கூடுதல் ஏற்பாடு இல்லாததும் முக்கிய காரணம்.
உதாரணமாக இன்று விசேஷ காலத்தினால் பேருந்து நிலையத்தில் அதிக கூட்டம் இருந்தது. மேலும் போக்குவரத்து அதிகாரிகள் ஒருவர் கூட இல்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். மதுரை திருச்சி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு பொதுமக்கள் நின்று செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வருங்காலங்களில் இதுபோன்ற தவறுகளை தவிர்க்க கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்





You must be logged in to post a comment.