10 குழந்தைகளின் தந்தை அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் மரணம்..

தூத்துக்குடிபாத்திமா நகர் 6வது தெருவைச் சேர்ந்த மீனவரான நஸ்ரின் (65), இவருக்கு எட்டு ஆண்பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர் தொடர் குடிப்பழக்கம் உள்ளவர் எனத் தெரிகிறது, இன்று காலை 11 மணிக்கு வீட்டில் இருந்து பேப்பர் படிக்க போவதாக சென்றவர் வீட்டிற்க்கு திரும்பி வரவேயில்லை, அவரது மகன் பிரபாகரன் அவரைத் தேடிச் சென்றுள்ளார்.

இந்நிலையில்அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு சிவந்தாகுளம் NCC office அருகில் கீழே விழுந்து இறந்து கிடப்பதாக, அவரது மகன் பிரபாகரன் (39)என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!