நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார்.சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை கவுதமி இணைத்துக் கொண்டார்.இதைதொடர்ந்து, நடிகை கவுதமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-மக்கள் சேவை செய்ய அதிமுகவில் இணைந்துள்ளேன். மக்கள் சேவை செய்ய சரியான கட்சி அதிமுக.அதிமுகவில் இணைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் களத்தில் இறங்கி வேலை செய்ய சரியான இடம் கிடைத்துள்ளது.பாஜகவில் இருந்து விலகியதற்கான காரணங்களை விளக்கமாக கூற உரிய நேரம் வரும்.ஜெயலலிதாவிற்கு பிறகு, ஈபிஎஸ் கட்சியை சிறப்பாக வழிநடத்தி செல்கிறார்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

You must be logged in to post a comment.