ராமநாதபுரத்தில் நிலம் மோசடி செய்த நபர் மீது நடிகை கௌதமி குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் !

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சுவத்தான் என்ற பகுதியில் நிலம் வாங்கி தருவதாக காரைக்குடி பகுதியைச் சேர்ந்த அழகப்பன் என்பவர் நடிகை கௌதமிடம் ரூபாய் 3 கோடி பணம் பெற்றுள்ளதாகவும். இந்நிலையில் சுமார் 64 ஏக்கர் நிலம் ரூ 57 லட்சம் மதிப்பில் மட்டும் வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் , அந்த நிலமும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தை போலியாக ஆவணம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ததாகவும் தெரிய வந்துள்ளது . எனவே நிலத்தை போலியாக வாங்கிக் கொடுத்தது பணத்தை ஏமாற்றியவர் மீது ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையில் ஏற்கனவே நடிகை கௌதமி புகார் அளித்திருந்தார் . இந்த நிலையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறைக்கு வழக்கு விசாரணைக்கு இன்று வந்துள்ளது. இது தொடர்பாக நடிகை கௌதமி ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி வழக்கு குறித்து காவல்துறை அதிகாரியிடம் நேரடியாக விளக்கம் அளித்தார். இது குறித்து காவல்துறை தீவிரமாக விசாரணைக்கு பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து திரைப்பட நடிகை கௌதமி செய்தியாளர்களிடம் கூறுகையில் :- நிலம் வாங்கி தருவதாக தான் ஏமாற்றப்பட்டதாகவும் தவறான ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்பனை செய்துள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது இது குறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!