பழநியில் 100 சதவீதம் வாக்குப்பதிவை முன்னிருத்தி நடிகர் சூர்யா நற்பணி மன்றத்தின் சார்பாக துண்டு பிரசுரம் வழங்கல்..

திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் பழனி பேருந்து நிலையம் அருகில் 100 சதவீதம் வாக்குப்பதிவை முன்னிருத்தி, தேர்தல் விழிப்புணர்வு மற்றும் கோடைக்கால நீர் மோர் பந்தல் அமைக்கபட்டு நீர் மோர் பாக்கெட் மற்றும் வாக்களிப்பதன் முக்கியத்துவம் அடங்கிய துண்டு பிரசுரங்கள் ஆகியவை வழங்கப்பட்டது.

 இதில் மாவட்ட, நகர, ஒன்றிய, இளைஞரணி, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர், கோடைக்காலம் முடியும் வரை பழனியின் முக்கிய இடங்களில் தொடர்ச்சியாக நீர் மோர் பந்தல் பந்தல் அமைக்கப்படும் என்றும் சூர்யா நற்பணி இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர்..

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!