இந்தியா கூட்டணிக்கு ஆதரவு! ராகுல் காந்தி தான் பிரதமராக வரவேண்டும்; மன்சூர் அலிகான் பேச்சு..

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரிப்பதாகவும் ராகுல் காந்திதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வரவேண்டும் என்றும் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் பேசியுள்ளார்.

நடிகரும்இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான்ஆம்பூரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். வேலூர் தொகுதியில் மன்சூர் அலிகான் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள பலாப்பழம் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ஓ ஏ ஆர் திரையரங்கம், கஸ்பா கரீம் ரோடு, நேதாஜி ரோடு, பைபாஸ் விநாயகர் கோயில், ரெட்டி தோப்பு ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அலிகானுடன் பொதுமக்களுடன் கலந்துரையாடி வாக்கு சேகரிபிபல் ஈடுபட்டார். பெண்கள், ஆண்கள், சிறுவர் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

பிரச்சாரத்தின்போது பேசிய மன்சூர் அலிகான்,திமுகவில் இஸ்லாமியர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை எனக் குறை கூறினார்.

ஆனால், நான் இந்திய கூட்டணி கட்சியை ஆதரிக்கிறேன். எங்கள் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான். இதைக் கூறுவதற்கு திமுகவுக்கு தைரியம் இல்லை. எனக்கு வாக்களித்தால் மக்களின் வேலைக்காரனாக இருப்பேன் என்றும் திமுகவுக்கு வாக்களித்தால் அவர்கள் ஊரையே கொள்ளையடித்துச் சென்றுவிடுவார்கள் என்றும் கூறினார்.

நான் வெற்றி பெற்றால் நாடாளுமன்றத்தையே நாறடித்துவிடுவேன். வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்றுதான் பேசுவேன் என்றும் மன்சூர் அலிகான் பேசினார்.

மன்சூர் அலி கான் பிரச்சாரத்திற்கு பறக்கும் படையினரிடம் முன் அனுமதி வாங்கவில்லை என்று சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தைக்குப் பின் பிரச்சாரத்தைத் தொடர அனுமதி வழங்கப்பட்டது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!