நடிகர், இயக்குனர் மனோஜ்(இயக்குனர் பாரதிராஜா மகன்) மாரடைப்பால் காலமானார்..

திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார். உடல்நலம் பாதிக்கப்பட்ட மனோஜ் பாரதிராஜாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரகாலமாக வீட்டில் ஓய்வில் இருந்த மனோஜுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது… சிகிச்சைக்காக எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிர் பிரிந்தது.

அவருடைய தந்தையின் இயக்கத்தில் ’தாஜ்மஹால்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் மனோஜ் பாரதி. ’சமுத்திரம்’ படத்தில் சரத்குமாரின் சகோதரர்களில் ஒருவராக நடித்தார். பின்னர் தன் தந்தை இயக்கத்தில், ’கடல் பூக்கள்’ படத்தில் நடித்தார். சரண் இயக்கத்தில் வெளிவந்த ’அல்லி அர்ஜூனா’ படத்தில் ஹீரோவாக நடித்தார். மறைந்த இயக்குநர் இரா.ரவிசங்கர் இயக்கத்தில் வெளியான ’வருஷமெல்லாம் வசந்தம்’ படத்தில் நடித்ததன் மூலம் மனோஜ்க்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பின்னர் பல்லவன்,ஈர நிலம்,மகா நடிகன்,சாதுர்யன்,அன்னக்கொடி’ உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்திருந்தார்.

இப்படி நடிகராக வலம் வந்த மனோஜ் பாரதிராஜா, கடந்த 2023ஆம் ஆண்டு முற்றிலும் புதுமுகங்களை வைத்து ‘மார்கழி திங்கள்’ என்ற படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்திருந்தார். இப்படத்தில், அவரது தந்தை பாரதிராஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில் அவருடைய மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மனோஜ் பாரதிராஜா, தனது காதலியான நந்தனாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!