எடப்பாடி பழனிச்சாமி யாருக்கு ஓட்டு கேட்கிறார்?அவர் ஒரு தலை இல்லாத முண்டம்! வயல்வெளிகளில் வைக்கப்படும் தலை சட்டி இல்லாத சோளக்காட்டு பொம்மை!-நடிகர் கருணாஸ் கடும் விமர்சனம்..

தென்காசி பாராளுமன்ற  திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமாருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் முக்குலத்தோர் புலி படை கட்சித் தலைவர் நடிகர் கருணாஸ் பரப்புரை..

அப்போது அவர் பேசியதாவது;

நாய்க்கு இருக்கும் நன்றி கூட இல்லாத நன்றி கெட்ட துரோகி எடப்பாடி பழனிச்சாமி. அரசியலில் துரோகம் என்பது நடக்கும். ஆனால் இப்படிப்பட்ட துரோகத்தை செய்வதற்கு ஒரு மனசு வேண்டும்.

ஸ்டாலின் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்கிறார். காவி கூட்டம் தமிழை அழித்து ஹிந்தியை புகுத்த தயாராக இருக்கிறோம், அதற்கு மோடியை பிரதமர் ஆக தேர்வு செய்யுங்கள் என்கிறார்கள்.

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் எடப்பாடி பழனிச்சாமி யாருக்கு ஓட்டு கேட்கிறார். அவர் ஒரு தலை இல்லாத முண்டம். வயல்வெளிகளில் வைக்கப்படும் தலை சட்டி இல்லாத சோளக்காட்டு பொம்மை அவர். அவர் கூட்டணிக்கு யார் பிரதமர் வேட்பாளர். வேட்பாளரே தெரியாத ஒரு கட்சிக்கு பொதுமக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்.

திட்டமிட்டு ஓட்டு போட்டாலும் தென்காசியில் உதயசூரியனை தோற்கடிக்க முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா கையில் அதிமுக இருந்த போது அனைத்து தரப்பட்ட மக்களுக்குமான விளிம்பு நிலை மக்களுக்கான கட்சியாக இருந்ததால் நமது தந்தையர் தாத்தா பாட்டி அந்த கட்சிக்கு வாக்களித்தனர்.

ஆனால் அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு அபகரித்த பின்னர் அதிமுக கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட கட்சியாக சுருங்கி விட்டது. ஜாதி கட்சியாக மாறிவிட்டது. ஜாதி மதம் ரீதியாக யார் ஒருவர் அரசியல் செய்ய நினைக்கிறாரோ அவன் இந்த நாட்டின் படுபாதகன் என பசும்பொன் தேவர் சொல்லி இருக்கிறார். இறுதிவரை கடவுள் மறுப்பு கொள்கை, பிராமண மறுப்பு கொள்கையில் உறுதியாக இருந்த தந்தை பெரியார் கூட சுத்த பிரம்மச்சாரியத்தை தனியாக கடைபிடித்த ஒருவர் என்றால் அது பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தான் என்று கூறியுள்ளார்.

அப்படிப்பட்ட தலைவர்களை பார்த்த நமது மண்ணில் மோடி போன்றவர்கள் மீண்டும் பிரதமராக வந்து விட்டால் ரஷ்யாவைப் போல் துண்டு துண்டாக இந்தியா மாறிவிடும். எச்சரிக்கையாக இருங்கள். எடப்பாடி பழனிச்சாமியின் கதை முடிந்து விட்டது. அதிமுக ஜாதி கட்சியாக மாறிவிட்டது.

சாமிக்காக அரசியல் செய்யும் சனாதான கூட்டத்தை புறந்தள்ளி பூமிக்காக அரசியல் செய்யும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!