மதுரையில் சாலைகளில் குப்பைகளுக்கு தீ வைப்பு… இணைதளம் மற்றும் பத்திரிக்கை செய்தி எதிரொலி..சுகாதார ஆய்வாளருக்கு நோட்டீஸ்..

கீழைநியூஸ் இணைதளத்தில் “மதுரை பைபாஸ் சாலையில் எரிக்கப்படும் குப்பைகளால் ஏற்படும் சுகாதார கேடு என” என 07/05/2019 செய்தி வெளியிடப்பட்டது.  பின்னர் அதைத் தொடர்ந்து நாளிதழிலும் 10/05/2019 அன்று சுகாதார பிரச்சினைகளை சுட்டிகாட்டி செய்தி வந்தது. 

இச்செய்திகளின் எதிரொலியாக மதுரையில் மாநகராட்டி துப்புரவுப் பணியாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் குப்பைகளை அகற்றாமல் தீ வைக்கும் சம்பவம் தொடர்பாக சுகாதார ஆய்வாளர் அறிக்கை தாக்கல் செய்யும்படி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாநகராட்சி ஆணையர் ச.விசாகன் விசாரணை நடத்தும்படி உத்திரவிட்டடிருந்தார்.  பொதுமக்களின் மத்தியில் நடத்தப்பட்ட விசாரனையில் தீவைப்பு சம்பவம் உறுதி செய்யப்பட்ட பின்பே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்ட்டது குறிப்பிடதக்கதாகும்.

மேலும் இதுபோன்ற சீர்கேடுகள் மற்றும் சமுதாய பிரச்சினைகளை அரசாங்கத்தின் பார்வைக்கு உடனடியாக கொண்டு செல்ல கீழை நியூஸ் மதுரை நிருபர் காளமேகம் –99944 50028 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

https://keelainews.in/2019/05/07/health-issue-14/ https://keelainews.in/2019/05/07/health-issue-14/

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!