சமூக நல்லிணக்கத்தை குலைக்க நினைப்பவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்… கீழக்கரையை குறி வைப்பவர்களுக்கு அரசாங்கம் பாடம் கற்பிக்க வேண்டும்…

இந்தியாவில்… அதுவும் அமைதி பூங்காவாக இன்றும் விளங்கி வரும் தமிழகத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல் வேறு விஷமிகள் தோன்றி சமூகநல்லிணக்கத்தை குலைக்க முயல்வதும் ஆனால் சமூகத்தால் நிராகரிக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.

அதேபோல் தேர்தல் நெருங்கி விட்டால் அமைதியை விரும்பும் கடவுளின் பெயராலும், மதத்தின் பெயரால் மக்களை பிரித்தாழ்வதும், ஓட்டு வங்கிக்காக தரம் தாழ்வதும் தொடர் கதையாகி வருகிறது. அதற்கு உதாரணமாக சில தினங்களுக்கு முன்பு கீழக்கரையில் அமைந்திருக்கும் ஜும்ஆ பள்ளி ஒன்றை முந்தைய காலத்தில் பிறமத கோயில் இருந்ததாகவும், அதை தொல்லியல் துறை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற விஷ கருத்து ஒன்றை மக்களிடம் பிரிவினையை உண்டாக்க வேண்டும், தன் பெயர் விளம்பரம் ஆக வேண்டும் என தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட விஷத்தை பரப்பும் அரசியல் கட்சியை சார்ந்த தரம் தாழ்ந்தவனால் சமூக வலைதளங்களில் பதியப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வை சாதாரணமாக தமிழக அரசும், காவல்துறையும் எடுத்து கொள்ளாமல், சம்பந்தப்பட்ட விஷமிகளை கைது செய்து, பயங்கர வாத தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை வழங்குவது மட்டுமல்லாமல் மற்றவர்களும் இது போன்ற செயல்களில் ஈடுபடாத வண்ணம் சட்டதிட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!