கீழை நியூஸ் எதிரொலி.. உடனடியாக மின்சார கம்பத்தில் இருந்து நீக்கப்பட்ட தனியார் பள்ளி விளம்பர பலகை..விதி மீறல் உயிர் சேதம் ஏற்பட்டால் பள்ளி பொறுப்பேற்குமா?..

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பைபாஸ் சாலை அக்ரஹாரம் மாடக்குளம் மெயின் ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் மின்கம்பங்களில் டால்பின் எனும் தனியார் பள்ளி விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாக நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

மேலும் மின்சார கம்பங்களில் அரசு ஊழியர்களை தவிர வேறு நபர்கள் ஏறுவது சட்டப்படி குற்ற செயலாகும், ஆனால் யாரும் இச்சட்டத்தை மதிப்பதும் இல்லை, மேலும் இரவு நேரங்களில் மின் தடை ஏற்படும் போது மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தில் ஏறுவதற்கு மிகவும் சிரமப்படுவதுடன், விபத்து ஏற்படுவதற்கும் வாயப்பாக அமைந்து விடுகிறது.

அதே சில மாதங்களுக்கு முன்பு பதாகை கீழே விழுந்து தமிழகத்தில் உயிர் பலியானதையும் யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால் மீண்டும் தனியார் நிறுவனங்கள், தங்கள் சொந்த லாபத்திற்காக அரசு எந்திரங்களை உபயோகப்படுத்துவது கண்டிக்கதக்கதாகும்.

இது தொடர்பாக இன்று (22/05/2020) காலை நமது (சத்திய பாதை மாத இதழ்)கீழை நியூஸ் இணையதள செய்தி வெளியிட்டிருந்தோம். இதனடிப்படையில் மதுரை பழங்காநத்தம் மின்வாரிய பொறியாளர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் அதிரடியாக களத்தில் இறங்கி மின்கம்பத்தில் கட்டப்பட்டு இருந்த தனியார் பள்ளி விளம்பர பதாகைகளை அகற்றினர்.

மேலும் அப்பள்ளிக்கு தொலைபேசி வழியாக தாங்களே அனைத்து விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் மீறும் பட்சத்தில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது சம்பந்தமாக உடனடி நடவடிக்கை எடுத்த மின்சார வாரியத்திற்கும் சத்தியபாதை-கீழை நியூஸ் நிர்வாகத்திற்கும் அப்பகுதி மக்கள் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!