உசிலம்பட்டி அருகே நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் ஊராட்சி மன்றத்தலைவர் 100நாள் வேலைத்திட்டத்தில் முறைகேடு செய்வதாக கிராமமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் பரபரப்பு.
இந்தியதிருநாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் கிராமங்கள் தோறும் கிராமசபைக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இதன்ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லுத்தேவன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிபுரத்தில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.நல்லுத்தேவன்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் சித்ராலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கிராம மக்கள் திமுக ஊராட்சிமன்றத் தலைவர் சித்ராலிங்கம் தனது கணவர் லிங்கம் மற்றும் வெளியூரில் உள்ள அவரது மகள் பிரியங்கா பெயரிலும் 100 வேலைத்திட்ட பயனாளி அடையாள அட்டை பெற்றுக் கொண்டு கடந்த 2 வருடமாக சம்பளம் பெற்று ஊழல் செய்திருப்பதை தகவல் உரிமைச்சட்டம் வாயிலாக அறிந்ததாகவும் பாலம் கட்டுவதற்கு லஞ்சம் வாங்குவதாகவும் ஊராட்சிக்கு சொந்தமான பழைய பம்பு செட்டுகளை ஏலம் விடாமல் தன்னிச்சையாக விற்பதாகவும் கிராமசபைக் கூட்டத்தில் அடுக்கடுக்கான கேள்விகள்; எழுப்பினர்.கிராம மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராலிங்கம் மழுப்பலாக பதிலளித்து விட்டு சீக்கிரமே கூட்டத்தை முடித்து வெளியேறினார்.திமுக ஊராட்சிமன்றத்தலைவர் மீது கிராமமக்கள் நேரிடையாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டைகளை எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.
பேட்டி – பூங்கொடி ஓய்வுபெற்ற ஆசிரியர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









