டூவீலரில் இருந்து விழுந்த ரேஷன் கடை ஊழியர் 2 வாரங்களுக்கு பின் மரணம்..

இராமநாதபுரம், ஆக.5 – ஏர்வாடி தர்ஹா சாலையில் வந்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்த ரேஷன் கடை ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி இந்திரா நகரைச் சேர்ந்தவர் வில்வதுரை பாண்டி, 59. இவர் ஏர்வாடி 2 ஆம் எண் ரேஷன் கடையில் பொறுப்பாளராக பணியாற்றினார். ஜூலை 17 ஆம் தேதி காலை பணிக்கு ஏர்வாடி தர்ஹா சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த போது, திடீரென மயங்கி நிலை தடுமாறி  கீழே விழுந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மதுரை அரசு மருத்துவனை, ஜூலை 20ல் மதுரை தனியார் மருத்துவமனைகளில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வில்வதுரை பாண்டி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக வில்வதுரை பாண்டி மகன் சபரி நாதன் புகாரில் ஏர்வாடி தர்ஹா போலீசார் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் லட்சுமி விசாரித்து வருகிறார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!