இராமநாதபுரம் அருகே கதிரறுக்கும் இயந்திரத்தில் சிக்கிய வாலிபர் தலை துண்டித்து பலி..

இராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை ஐந்து ஏக்கர் மீனவர் நகரைச் சேர்ந்த கண்ணதாசன் . இவரது மகன் விக்னேஸ்வரன், 22. ரெகுநாதபுரத்தில் உள்ள மளிகை கடையில் வேலை செய்த இவர் தினமும் இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு தினமும் வந்து சென்றார்.

இன்று (11/02/2010) இரவு வேலை முடிந்த இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது சேது நகர் அருகே ஒத்தக்கடை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கதிரறுக்கும் இயந்திரம் மோதியது. இதில் இயந்திரத்தில் உள்ள வரிசையாக உள்ள கூர்மையான கத்திகளில் தலை துண்டித்து பலியானார். விக்னேஸ்வரன் உடலை திருப்புல்லாணி போலீசார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!