இராமநாதபுரத்தில் சாலை விபத்தில் ஒருவர் பலி..

இராமநாதபுரம் ஆயுதபடை காவலர் திரு.மொட்டையன் என்பவா் 29/12/2018 இன்று அதிகாலை சுமார் 01:00 மணியளவில் ராமநாதபுரம் – தூத்துக்குடி செல்லும் சாலையில் கழுங்கு என்ற இடத்தில் உள்ள செக்போஸ்ட் அருகே விபத்தில் சிக்கி தலைக்கவசம் அணிந்தும் உயிரிழந்தார்.

காவலர் மொட்டையன் விடுப்பு கேட்டிருந்த நிலையில் காப்பு பணி (Guard) அனுப்பியுள்ளனார். இரவு காப்பு தணிக்கை (Guard Checked) முடிந்தவுடன் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.அதிக பனிப்பொழிவு (Mist) காரணமாக எதிரே வந்த வாகனம் சரிவர தெரியாமல் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இவர் விருதுநகா் மாவட்டம் (ராமநாதபுரம் மாவட்ட எல்லை) கீழ்க்குடியை சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி சில மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தி:- ஜெ.அஸ்கர், திண்டுக்கல்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!