மதுரை மாவட்டம் கருப்பாயூரணி சேர்ந்தவர் மணிகண்டன் வயது 22 இவர் மதுரையிலிருந்து பழனி முருகன் கோவிலுக்கு பாத யாத்திரையாக வந்து கொண்டிருந்தார். நேற்று மாலை பள்ளபட்டி அருகே உள்ள பாண்டிய ராஜபுரம் என்னுமிடத்தில் அந்த வழியாக வந்த வேன் மணிகண்டன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலே பரிதாமாக இறந்தார். தகவலறிந்த
நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அந்த வேனை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். இதுகுறித்து அமைய நாயக்கனூர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவரை மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ராமன் நாயக்கன்பட்டி சேர்ந்த சிவசுப்பிரமணி வயது 38 என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்
நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ராஜா


You must be logged in to post a comment.