மதுரையில் கட்டிட பணியின்போது மணல் சரிவில் சிக்கி தொழிலாளர் உயிரிழப்பு – 3பேர் படுகாயம் போலிசார் விசாரணை…

மதுரை கீழவாசல் பகுதியில் மைனா தெப்பகுளம் 3வது தெருவில் செந்தில் குமார் என்பவருக்கு சொந்தமான தனியார் நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மணல் சரிந்து விழுந்ததில் மதுரை அழகாபுரியை சேர்ந்த மதுரை வீரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் மண் சரிவில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் செல்வம், செல்வராஜ், குப்பாண்டி ஆகிய மூன்றுபேரும் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து விளக்கத்தூண் போலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். நெருக்கமான கட்டிடங்கள் அமைந்துள்ள பகுதியின் நடுவில் 20அடி ஆழத்திற்கு அதிகமாக தோண்டியபோது ஏற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழப்பு குறித்தும், கட்டிட பணிகளில் விதிகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்தும் மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி:- கனகராஜ், மதுரை

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!