வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி அவரது குடும்பத்துடன் பெங்களூர் சென்று கொண்டிருந்தபோது மின்னூர் என்ற இடத்தில் கார் சாலையோரம் உள்ள மரத்தின் மீது மோதி கிணற்றில் கவிழ்ந்து விழுந்தது.
பின்னர் கிணற்றில் சிக்கிக்கொண்ட சுந்தரமூர்த்தி தனது திறமையின் மூலம் 108 தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் இடம் தெரியாமல் தேடி வந்துள்ளனர் உடனே சம்பந்தப்பட்ட காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் விடியற்காலை அதிவேகமாக வந்த ரோந்து போலீசார் மற்றும் கிராமிய போலீசார் கிராம மக்கள் உதவியுடன் கிணற்றில் விழுந்து அவர்களை கண்டுபிடித்தனர். அதை தொடர்ந்து தனது உயிரையும் பொருட்படுத்தாமல் ஆம்பூர் கிராமிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் மற்றும் காவலர் சரவணன் ரோந்து போலீஸ் உதவி ஆய்வாளர் ரகுபதி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் என மின் விளக்கு இல்லாத இடத்தில் இருந்த அக்கிணற்றை கண்டுபிடித்து சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர்.
விபத்தில் சிக்கியவர் 2.O படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்த சுந்தரமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
கே.எம்.வாரியார், செய்தியாளர்-வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










