அரசு பஸ் – வேன் மோதல் : சிறுவர்கள் உள்பட 10 பேர் காயம்…

இராமேஸ்வரத்தில் அரசு பஸ் இன்று இரவு 7 மணி அளவில் இராமநாதபுரம் சென்று கொண்டிருந்தது. உச்சிப்புளி அருகே கீழநாகாச்சி பஸ் நிறுத்தம் பகுதியில் சென்ற போது, எதிரே வந்த வேனும் மோதிக் கொண்டன. இதில் வேன் டிரைவர் ஷேக் அப்துல்லா (தங்கச்சிமடம்) மற்றும் சிறுவர்கள், பெண்கள் உள்பட 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மீட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனை அனுப்பினர். ஆர்.எஸ்.மங்கலம் சென்று விட்டு தங்கச்சிமடம் திரும்பிய வேன் என விசாரணையில் தெரிந்தது. காயமடைந்த தங்கச்சிமடத்தை சேர்ந்த ஷேக் அப்துல்லா உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். காயம் அடைந்த சிறுவர்கள் உள்பட 10 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்து உச்சிப்புளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!