சாலை விபத்து – 4 பேர் பலி..வீடியோ..

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது ஆம்னி வேன் மோதி விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் என 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்துகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசரணை நடத்தி வருகின்றனர்.

 

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள கணக்கப்பிள்ளைவலசைப் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சக்தி . இவர்கள் தங்களது 7 வயது மகன் அன்புச்செல்வன் , 5 வயது மகள் மதுபாலா ஆகியோருன் இருசக்கர வாகனத்தில் கடையம் அருகே அருணாசலபட்டியில்திருமண விழாவிற்கு குடும்பத்துடன் சென்று விட்டு ஊருக்கு திரும்பிச் செல்கையில் பாவூர்சத்திரம் – கடையம் சாலையில் திரவியம்நகர் என்ற பகுதியில் எதிரே வந்த ஆம்னி வேன் எதிர்பாரதவிதமாக இருசக்கர வாகனத்தில் மோதிவிபத்துக்குள்ளானத்தில் இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டு இருசக்கர வாகனத்தில் வந்த சுரேஷ் அவரது மனைவி சக்தி இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 4 பேரின் உடலையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடையம் :பாரதி

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!