இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே அரியகுடியைச் சேர்ந்தவர் சித்தி விநாயகம். இவரது உறவினர் சோமசுந்தரம் என்பவருக்கு ராமேஸ்வரத்தில் இன்று காலை (29.10.18 ) திதி கொடுத்து விட்டு சித்தி விநாயகம் ( மதுரை கிருஷ்ணாபுரம் காலனியில் தற்போது வசிக்கின்றனர்). அவரது மனைவி ராகசுதா, இவரது குழந்தைகள் மற்றும் உறவினர்கள் உள்பட 10 பேர் காரில் ஊர் திரும்பினர். சித்தி விநாயகம் காரை ஓட்டி வந்தார்.இந்த கார் ராமநாதபுரம் அருகே குயவன்குடி பகுதியில் காலை 11 மணி அளவில் வந்து கொண்டிருந்தது.

அப்போது மதுரையில் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு இன்று காலை 8:30 மணியளவில் கிளம்பி ராமேஸ்வரம் சென்ற வாடகை வேனும் நேருக்கு நேர் மோதியது. இதில் சித்தி விநாயகம் குழந்தைகள் சாய்ராம் 4, திருமுருகன் 3, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் படுகாயமடைந்த ராஜேந்திரன் 60, இவரது மனைவி அம்பிகா 53 ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். லேசான காயமடைந்த ராக சுதா, சாதனா, இந்திரா, சுரேஷ், ரம்யா ஆகியோருக்கு இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்ட சித்தி விநாயகம் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த மதுரை மெகபூப்பாளையத்தைச் சேர்ந்த டிரைவர் ஜெரால்டு 35, நேபாளம் சுவிச்சனா வார இதழ் ஆசிரியர் ஷலேந்திர மோகன் ஜா, இவரது மனைவி கருணாஜா (பண்பலை நிருபர்), கொல்கத்தா மாணவர் சாகர் உள்பட 21 பேர் காயமடைந்தனர். விபத்திற்கான காரணம் குறித்து கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.


உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











