இரு வாகனம் நேருக்கு நேர் மோதி.. பள்ளி மாணவர்கள் காயம் ..

இராமநாதபுரம் அருகே வாணி பகுதியில் தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆம்னி வேனும், எதிரே இன்னோவா காரும் மோதியதில் பள்ளி மாணவர்கள் 7 பேர் காயம் அடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

டிரைவர் உள்பட 3 பேருக்கு கால் முறிவு ஏற்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேணிக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!