இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே தெற்கு தரவை தங்கவேல் மகன் மனோஜ் குமார், 21. தனியார் கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வந்தார். அவர் இன்று (06/09/2018) மாலை இளமனூரில் டூவீலரில் ஊருக்கு திரும்பினார். அவர் கிழக்கு கடற்கரை சாலை பாப்பாகுடி பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அது வழி சென்ற மற்றொரு டூவீலர் நேருக்கு நேர் மோதியதில் மனோஜ்குமார் உயிரிழந்தார்.
இதில் திருவாடானையைச் சேர்ந்த மலைராஜ் மகன் குமாருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இது குறித்து இராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.




You must be logged in to post a comment.