தென்காசி அருகே கோர விபத்து; 06 பேர் உயிரிழப்பு..

தென்காசி அருகே இடைகால் துரைச்சாமிபுரம் பகுதியில் இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்துக்குள்ளானது. இதில் 06 பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தென்காசியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடைகால் துரைச்சாமிபுரம் பகுதியில், தென்காசியில் இருந்து கடையநல்லூர் நோக்கி சென்ற ஒரு தனியார் பேருந்தும் கடையநல்லூரில் இருந்து தென்காசி நோக்கி வந்த மற்றொரு தனியார் பேருந்தும் இடைகால் துரைச்சாமிபுரம் பகுதியில் நேருக்கு நேர் மோதியது. இதில் இரண்டு பேருந்துகளும் பலத்த சேதமடைந்தது பேருந்தில் பயணம் செய்த பயணிகள் ஆறு பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

 

இது குறித்து தகவல் அறிந்த தென்காசி எஸ்.பி அரவிந்த் மற்றும் இலத்தூர் போலீசார் சம்பவ இடத்தில் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 108 வாகனம் மூலம் பலத்த காயம் அடைந்தவர்களை உடனுக்குடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Details of the Deceased: பலியானவர்கள்

1. Vanaraj (67/25), 36-A, Vinayagar Temple Street, 4th Street, Tenkasi Puthukudi

2. Thenmozhi (55/25), W/o Venkatashwaran, Puliyamukku Street, Kadayanallur.

3. Malika (55/25), Puliyangudi.

4. Karpagavalli (32/25), near Sankarankovil.

5. Unknown Female — Aged about 50 years, wearing Yellow and Red Saree.

6. Unknown female aged about 50 wearing green saree and blouse.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!