உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் – திமுக ஒன்றிய கவுன்சிலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிபட்டியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி, திமுக உசிலம்பட்டி வடக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதியாகவும், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய 4வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார்.,இவர் இன்று வத்தலக்குண்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விருவீடு அருகே உசிலம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து இவரது இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.,இதில் படுகாயமடைந்த துரைப்பாண்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.,தகவலறிந்து விரைந்து வந்த விருவீடு காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்துவிட்டு இந்த விபத்து குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,சாலை விபத்தில் திமுக ஒன்றிய கவுன்சிலர் உயிரிழந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.,

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!