விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கீழக்கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (32). இவர் நரிக்குடி காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் இன்று காலை நரிக்குடி காவல் நிலையத்திலிருந்து மானாசாலை செக் போஸ்ட்டிற்கு பணிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் தனது டூவீலரில் சென்றுள்ளார். அப்போது நரிக்குடி அருகேயுள்ள மறையூர் பாலத்தை கடந்து வளைவில் சென்ற போது ராஜேஸ்வரனுக்கு எதிரே வேகமாக வந்த லாரியொன்று ராஜேஸ்வரன் மீது பயங்கரமாக மோதியதில் லாரியின் சக்கரத்திற்குள் சிக்கிய நிலையில் 20 அடி தூரம் இழுத்து சென்றுதில் தலை நசுங்கிய நிலையில் மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நரிக்குடி போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்த ராஜேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து திருச்சுழி dsp ஜெகநாதன் நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டார்.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












