இராமநாதபுரம், ஆக.14-
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்குச் சென்ற தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து கீழக்கரை அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பஸ் நிறுத்தம் அருகே சென்றது. அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து மீன்கள் ஏற்றி வந்த சரக்கு வாகனம் மீது மோதி, பாலிடெக்னிக் கல்லூரி முன் நின்ற மரங்களை முறித்துக் கொண்டு நின்றது. இதில் பஸ் நிறுத்தத்தில் பேருந்துக்கு காத்திருந்த மூதாட்டி 2 பேர் பரிதாபமாக பலியாகினார். முறிந்த மரக்கிளைகளை கல்லூரி மாணவர்கள் மீட்டனர்.
மேலும் காயமடைந்த 2 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து கீழக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.





You must be logged in to post a comment.