மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த பழ வியாபாரி மற்றும் குடும்பத்தினர் 5 பேர் கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி. ஏழு மாத பெண் குழந்தை காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. இறந்தவர்களில் ஒருவர் கல்லூரி மாணவி.
மதுரை மாவட்டம் திருமங்கலம் சவுக்கத் அலி தெருவைச் சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக். ( வயது 50). பழ வியாபாரி. இவர் தனது ஆம்னி காரில், திருமங்கலத்தில் இருந்து சிவகாசிக்கு, சிவகாசியில் வசிக்கும் தனது மகள் நஸ்ரின் பாத்திமா (வயது 25), பேத்தி இளான் (ஏழு மாதம்), மனைவி சஹர் பானு (வயது 50), இன்னொரு மகள் கல்லூரி மாணவி ஷிபா (வயது 18) ஆகியோருடன் சென்று கொண்டிருந்தார். காரை மகன் சாகுல் ஹமீது (வயது 22) ஓட்டிக் கொண்டு இருந்தார்.
கார் திருமங்கலத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் கள்ளிக்குடி சந்திப்பைத் தாண்டி சென்று கொண்டு இருந்த போது, மாலை ஆறு முப்பது மணி அளவில் எதிரே விருதுநகரில் இருந்து மதுரை நோக்கி ஹோண்டா சிட்டி (கர்நாடகா பதிவு) கார் கண்ணிமைக்கும் நேரத்தில் டயர் வெடித்து, சென்டர் மீடியனில் மோதி இவர்களது ஆம்னி கார் மீது அதி வேகத்துடன் மோதிக் கவிழ்ந்தது. இதில் ஆம்னி வேனில் சென்ற 5 பேரும் பலியாகினர்.
சிறுமி இளான் (7 மாதம்) காயங்களுடன் மீட்கப்பட்டு, மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். டயர் வெடித்த சொகுசு காரில் ஏர் பலூன் விரிந்ததில், அந்தக் காரை ஓட்டி வந்த பெங்களூர் விராட் நகரைச் சேர்ந்த இஞ்சினியர் கெளதமன் (வயது 27) கால்களில் அடிபட்டு காயங்களுடன் திருமங்கலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
கள்ளிக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஒரே நேரத்தில் 5 பேரை உயிரிழந்தது திருமங்கலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்








You must be logged in to post a comment.