ரயில் இன்ஜின் மோதி அடையாளம் தெரியாத முதியவர் பலி அடையாளம் காணும் பணியில் ரயில்வே காவல்துறை தீவிர விசாரணை..

மதுரை மாவட்டம் கரிசல்குளம் பாத்திமா கல்லூரி இடையிலான ரயில்வே பாதையில் அடையாளம் தெரியாத சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார், அப்பொழுது திண்டுக்கல்லில் இருந்து ரயில் இன்ஜின் ஒன்று முதியவர் மீது மோதியதில் நிகழ்விடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மதுரை ரயில்வே காவல் துறைக்கு கொடுத்த தகவலடிப்படையில் ச இருப்புப்பாதை காவல் துறையினர் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் அவர் அணிந்திருந்த சட்டையில் இன்று (18/10/2020) காலை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வெளியே நோயாளியாக சிகிச்சை பெற்றதற்கான சீட்டில்  அதில் ராஜேந்திரன் என பெயர் குறிப்பிட்டு இருந்தது, அதனடிப்படையில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இப்புகைப்படத்தில் உள்ள நபர் பற்றிய தகவல் தெரிந்தால் +919498140010 எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

 செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!