செயலிழந்த நிலையில் 108 எண்…. மாற்று ஏற்பாடு செய்யப்படுமா??.. தொடரும் விபத்தில் தத்தளிக்கும் மதுரை நகர்..

மதுரை மாநகர் மற்றும்  பழங்காநத்தம் காளவாசல் பைபாஸ் சாலை வா உ சி பாலம் அருகே தினசரி விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.

இதனால் பல விபத்துக்களுளடன், கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.  போக்குவரத்து காவலர்கள்  நியமிக்கப்பட்டாலும், வேகமாக செல்லும் ஷேர் ஆட்டோக்களில் தொல்லை அதிகம் இருப்பதால் பைபாஸ் சாலை மற்றும் அதன் சுற்றுபகுதியில் நெரிசல் மற்றும் விபத்து ஏற்படுகிறது.

இந்த நிலையில் இன்று (08/10/2020) மாலை மதுரை பைபாஸ் சாலையில் காளவாசலில் இருந்து பழங்காநத்தம் நோக்கி சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டி மற்றொரு வாகனத்தை முந்திச் செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலரும் பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் அவசரகாலத்தில் 108க்கு தொலைபேசி எண்ணுக்கு அழைத்தால் தொலைபேசி செல்வதில்லை எனவும் புகார் எழுந்து உள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 செய்தியாளர்.வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!