பட்டாசு ஆலைகளுக்கு வேலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற மினி பஸ் கவிழ்ந்து விபத்து 9 பேர் காயம்…

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலைகளுக்கு வேலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற மினி பஸ் கவிழ்ந்து விபத்து 9 பேர் காயம் மல்லி காவல்துறையினர் விசாரணை.

ஊரடங்கு காரணமாக 50 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பட்டாசு ஆலைகள் தற்போது 5 சதவீத பணியாளர்களுடன் வேலையை தொடங்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது இந்நிலையில் மாவட்டம் முழுவதும் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சிவகாசி பகுதியில் உள்ள கிருஷ்ணசாமி பட்டாசு ஆலைக்கு வேலைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி,  கார்த்திகை கட்டி , அப்பநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பணியாட்களை ஏற்றுக்கொள்ள பட்டாசு ஆலைகள் சார்பாக வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பணியாட்களை ஏற்றிக்கொண்டு கோப்ப நாயக்கன்பட்டி விளக்கு பகுதியில் மினி பஸ் வந்தபோது ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற சாலையில் கவிழ்ந்தது இதில் எட்டு பெண்கள் ஒரு ஆண் காயமடைந்தனர். அருகில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் கவிழ்ந்து பேருந்தை நிமிர்த்தினர். காயமடைந்தவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!