திண்டுக்கல் மாவட்டம் முருகபணம் இரண்டு வழிச்சாலையை கடக்க முயன்ற 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் மீது திண்டுக்கல் தனியார் கல்லூரி வாகனம் இன்று அதிகாலை கட்டுப்பாட்டை இழந்து அவர் மீது மோதியது. இதில் கழுத்து பகுதியில் பலத்த காயமடைந்த அவரை திண்டுக்கல் நகர் போலீசார் மீட்டு தலைமை மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து தனியார் கல்லூரி வாகன ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த்தால் இரண்டு வழிசாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


You must be logged in to post a comment.